Pages

Sunday, November 4, 2012

முயலை வென்ற ஆமை

அது ஒரு அடர்ந்த காடு. சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற கொடிய விலங்குகளும் மான், முயல், காட்டுக்குதிரை, வரிக்குதிரை போன்ற அமைதியான விலங்குளும் தங்களுக்கென எல்லைகளை வகுத்துக்கொண்டு வாழும் அளவுக்கு மிகப்பெரிய காடு.

அந்த காட்டில் சுமார் 150 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஆமை ஒன்று தனது பேரக்குழந்தைகளை காண காட்டின் மறுபகுதிக்கு சென்றிருண்டது. குழந்தைகளுடன் அன்றைய நாளை அமைதியை செலவிட்ட ஆமை மாலை வந்ததும் தனது இருப்பிடத்தை நோக்கி புறப்பட்டது.

ஆமை மிகவும் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தது. இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் வெகுதூரம் இருந்தது.

வானம் மிகவும் கருத்து மேகக்கூட்டங்கள் அந்த காட்டின் மீது படர்ந்தன. அதை கண்ட காட்டு விலங்குகளும் பறவைகளும் தங்கள் வேலைகளை சீக்கிரம் முடித்துக்கொண்டு தங்கள் வீடுகளை நோக்கி வேகமாக திரும்பின. பல விழங்குகள் தங்கள் பிள்ளைகளையும், உணவுப்பொருட்களையும் பதிரப்படுதுவதில் முனைப்புடன் ஈடுபட்டன.


அப்போது அந்த ஆமை நடந்து சென்ற வழியாக ஒரு இளம் முயல் வேகமாக ஓடிவந்து கொண்டிருந்தது.

அந்த முயல் ஓடிவரும் வழியில் ஆமை மிகவும் மெதுவாக நடந்து வருவதை கண்டது. அதைக்கண்டதும் அந்த இளம் முயல் ஆமையை பார்த்து "ஏ சோம்பேறி ஆமையே வேகமாக ஓடு. இல்லையென்றால் மழையில் நனைந்து விடுவாய்" என்று சொன்னது.

அதை கேட்ட ஆமை "தம்பி ! உன் எச்சரிக்கைக்கு நன்றி, அனால் என்னால் உன்னைமாதிரி ஓட முடியாது, நான் மெதுவாகத்தான் வருவேன்" என்றது.

முயல் "என்ன ? உன்னால் ஓட முடியாதா? அப்பறம் எதற்கு நீயெல்லாம் இந்த உலகத்தில் வாழ்கிறாய்?" என்று ஏளனமாய் சிரித்தது.

இதை கேட்டு சற்றும் கொபமடையாத ஆமை "தம்பி ! உனக்கு என்ன வயது ஆகிறது? " என்று கேட்டது. அதற்கு அந்த முயல் "நான் மிகவும் பெரியவன். நான் பிறந்து 15 மாதங்கள் ஆகின்றன" என்று பதில் கூறியது.

"தம்பி ! நான் இந்த பூமிக்கு வந்து 150 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. நான் இதே மெதுவான நடையுடந்தன் இந்த 150 ஆண்டுகளையும் கடத்து வந்துள்ளேன். அதனால் என்னை பற்றி ஏளனமாய் பேசாதே. எனக்கு வேகம் இல்லாமல் இருக்கலாம். அனால் நிறைய விவேகம் உள்ளது. " என்று எடுத்து கூறியது.


"விவேகத்தை வைத்து என்ன செய்வாய்? இப்போது மழையில் மாட்டிக்கொள்ளாமல் உன்னால் வீடு பொய் சேர முடியுமா? "என்றது.

"முடியும் தம்பி ! என்னால் முடியும்" என்று சற்றே புன்சிரிப்புடன் சொன்னது ஆமை.

"எங்கே பார்க்கலாம். நம் இருவருக்கும் ஒரு போட்டி. யார் இந்த காட்டின் மறுமுனையை முதலில் அடைகிறார்கள் என்று. போட்டிக்கு தயாரா?" என்றது முயல்.

"சரி தம்பி ! உன் விருப்பம் ! " என்ற ஆமை அதே வேகத்தில் நடந்து கொண்டிருந்தது.

முயல் முன்னைவிடவும் மிகவும் வேகமாக ஓடியது. தன்னால் இயன்ற வேகத்தை விடவும் மிகவும் வேகமாக ஓடியதால் ஏற்பட்ட பெருமூச்சையும் பொருட்படுத்தாமல் அது ஓடிக்கொண்டிருண்டது.










Thursday, August 30, 2012

கா கா கா....


ஒரு ஊரிலே ஒரு காக்கை இருந்தது. அது ஒருநாள் நாள் தன்னுடைய நீண்டநாள் நண்பனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல அவனது ஊருக்கு புறப்பட்டது. 


அந்த நண்பனின் ஊர் காக்கையின் வீட்டிலிருந்து வெகுதூரத்தில் இருந்தது. 
எவ்வளவு தூரம் இருந்தால் என்ன? நண்பன் முக்கியமல்லவா..
காக்கை உற்சாகமாக புறப்பட்டு பறந்து சென்றது. 

நெடுநேரம் பிரயாணம் செய்த காக்கை களைப்புற்று ஒரு வீட்டின் மொட்டை மாடியில் வந்து அமர்ந்தது. 
சிறிது நேரம் கண்களை மூடி ஓய்வெடுத்த காக்கை 'மிகவும் தாகமாக இருக்கிறதே, சிறிது தண்ணீர் கிடைத்தால் நன்றாக இருக்குமே' என்று எண்ணியது.

அந்த பகுதியில் நிறைய வீடுகள் இருந்தன. அதனால் அந்த காக்கை எப்படியும் தண்ணீர் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் வானத்தில் பறந்து அந்த வீடுகளை சுற்றி வட்டமிட்டது.

ஆனால் எங்கும் தண்ணீர் கண்ணில் தென்படவில்லை. 
ஏமாற்றமடைந்த காக்கை, 'இது என்ன கொடுமை. எங்குமே தண்ணீர் இல்லையே. இப்போது நான் என்ன செய்வது? கடவுளே ! எனக்கு தாகமாக இருக்கிறதே, ஏன் நண்பனை காண வெகுதூரம் போகவேண்டுமே' என்று சோகமாக தனக்குள் பேசிக்கொண்டது. அப்போது அந்த காக்கையின் கண்ணில் ஒரு மண்குடம் தென்பட்டது.

அதை பார்த்த காக்கை ஆவலுடன் அதனருகில் சென்று அதனுள்ளே எட்டிப்பார்த்தது. 

என்ன ஆச்சரியம்! அந்த குடத்தின் உள்ளே கொஞ்சமாக தண்ணீர் இருந்தது. மிகுந்த உற்சாகமடைந்த காக்கை அதன் விளிம்பில் உட்கார்ந்து உள்ளே தலையை விட்டு தண்ணீரை குடிக்க முயன்றது. அனால் முடியவில்லை. தண்ணீர் மிகவும் அடியில் இருந்தது. காக்கையால் அவ்வளவு உள்ளே குனியமுடியவில்லை. 


தாகம் தீர்க்க உதவும் தண்ணீர் அருகே இருந்தும் அதை அள்ளிப்பருகமுடியாத தவிப்பில் இருந்த காக்கைக்கு சட்டென்று ஒரு யோசனை உதயமானது.

அறிவுக்கூர்மையுடைய அந்த காக்கை சுற்றும் முற்றும் பார்த்தது. கல்லும் மண்ணும் சில பூந்தொட்டிகளும் இருந்தன.

உடனே அந்த காக்கை அந்த கற்களை ஒவ்வொன்றாக எடுத்து அந்த தண்ணீர் இருந்த பானைக்குள் போட்டது.

வெகு தூரம் பிரயாணம் செய்து வந்த களைப்பையும் பொருட்படுத்தாமல் அந்த காக்கை மிகுந்த முனைப்புடன் அங்கு சிதறிக்கிடந்த கூழங்கர்களை எடுத்து பானைக்குள்  போட்டுக்கொண்டே எட்டி எட்டி பார்த்தது.

தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வருவதை கண்ட அந்த காக்கை பெரும் மகிழ்ச்சி அடைந்து  மேலும் உற்சாகத்துடன் கைக்கிளை நிரப்பியது.
சிறிது நேர முயற்சிக்கு பின், தண்ணீர் முழுவதுமாக மேலே வந்து நின்றது. அதை பார்த்த காக்கை தன்னுடைய முயற்சிக்கு பலன் கிடைத்ததை எண்ணி இறைவனுக்கு மனதார நன்றி கூறியது. பின்னர் நிதானமாக அந்த தண்ணீரை பருகி தாகம் தனித்துகொண்டது.

நண்பனை காண உயரே பறக்க தொடங்கியது. !!! கா கா கா....