Pages

Monday, November 11, 2013

மனு நீதி சோழன்

சோழ மன்னர்கள்

அத்தியாயம் 1

மனு நீதி சோழன் சோழர் பரம்பரையில் அறியப்பட்ட முன்னோடி அரசர்களுள் ஒருவர். மல்லாளன் என்ற இயற் பெயர் கொண்டு, மனு நீதி சோழ சக்கரவர்த்தி என்று வரலாற்றில் நீங்க இடம் பெற்றவர். இவரது நீதி வழுவா ஆட்சிக்கு இறவா புகழ் சேர்க்கும் விதமாக, சென்னை உயர் நீதி மன்றத்தில் இவரது சிலை வைக்கப்பட்டுள்ளது.

இவர் கிட்டத்தட்ட கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 235 ஆண்டுகள் முன்னர் அவதரித்தார். இவரது பெற்றோர் குறித்தோ இவரது இளமைகால  வழக்கை  குறித்தோ அவ்வளவாக அறியப்படவில்லை. இவரது சகோதரர் எல்லாகன் தமிழக சோழ சாம்ராஜியத்தை உறையூரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வருகையில் இவர் இலங்கையை நோக்கி படை திரட்டிக்கொண்டு போனார். அப்போது அவருக்கு வயது 20க்கும் குறைவாகவே இருக்கக்கூடும்.

வட இலங்கையில் அனுராதபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சிபுரிந்து வந்த ராஜரத பேரசசை ஆண்டு வந்த அசேலன் என்னும் சிங்கள மன்னனை எல்லாளன் எதிர்கொண்டார். அசேலன் ராஜரத பேரரசை சுமார் 10 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்திருந்தான். எவ்வளவோ படைபலம் இருந்தும் அசேலன் படைகள் எல்லாளன் முன் தவிடுபொடி ஆகின.

கடும் போருக்கு பின் எல்லாளன் படைகள் அசேலனை கொன்று எல்லாளன் அனுராதபுரத்தில் சோழ சாம்ராஜியத்தை நிறுவினார். தமிழகத்தில் இருந்து படையெடுத்து சென்று ஆட்சியை கைப்பற்றிய போதிலும் எல்லாளன் சிங்கள மக்களை தன் மக்களாகவே கறுதி நடுநிலையோடு நேர்மை தவறாது ஆட்சிபுரிந்து வந்தார். அவரது ஆட்சிகாலத்தில் வட இலங்கை சீரும் சிறப்புமாக விளங்கியது. 

கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் அதிகமாக எல்லாளன் இலங்கையின் வட மாகாணங்களை கட்டுக்கோப்பாக ஆண்டு வந்தார். இந்த 70 ஆண்டுகளும் எள்ளலனை ஒரு அந்நிய அரசனாக கருதாமல் மக்கள் தங்கள் சொந்த மன்னனாகவே கறுதி வாழ்ந்தமைக்கு அவரது நீதி வழுவாத மக்கள் உணர்வுகளை மதித்து நடுநிலையோடு ஆட்சி புரியும் திறனே முழுமுதற் காரணமாக அமைந்தது. எல்லாளன் தன் பிரஜைகள் எந்த நேரத்திலும் பயமின்றியும் நீதியை பெறுவதில் எள்ளளவும் தாமதமின்றி பெறவேண்டும் என்பதிலும் மிகவும் கவனமாக இருந்தார்.

மக்கள் எந்த நேரத்திலும் தன்னை அணுக அவரது அரண்மனையின் வாசலில் ஒரு மாபெரும் மனிகூண்டை கட்டி அதில் ஒலி எழுப்ப வசதியாக அதன் முனையில் பெரிய கயிற்றையும் கட்டி தொங்கவிட்டிருந்தார். அதோடு நில்லாமல் அந்த  மணியின் அசைவு தனக்கு உடனதியாக தெரியும் விதமாக மணியுடன் இணைத்த இன்னொரு கயிற்றை தனது கட்டிலில் இணைத்திருந்தார் எனவும் ஒரு வரலாறு உள்ளது. நீதிக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்த மாமன்னனின் வாழ்வில் அவனது நீதிவழுவமையை சோதிக்க ஒரு கடுமையான சோதனை வந்தது.

மன்னரின் அருந்தவப்புதல்வன் வீதிவிடங்கன் சின்னஞ்சிறு பிள்ளை. அவன் தனது இளம் வயதிலேயே வீர பராக்ரமங்களில் ஈடுபட்டு தலைசிறந்த வீரனாக உருவெடுக்க எண்ணியிருந்தான். அப்படி ஒரு சமயம் அவன் தேரேற்றதில் ஈடுபட்டிருக்கையில் ஆர்வ மிகுதியால் தேரை வீதியில் மிக வேகமாக ஓட்டிச்சென்றான்.

வீதியில் நடமாடிக்கொண்டிருந்தவர்களில் சிலர் அதை ரசித்தும், சிலர் அதை கண்டு அஞ்சியும் விலகிச்சென்றனர். கூடியிருந்த அவனது வயதையொத்த இளம் பிள்ளைகள் 'வேகம்', 'வேகம்' என்று அவனை மேலும் உற்சாகபடுதினர். அந்த வேளையில் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு ஒரு பசுங்கன்று வழிதவறி ராஜபாட்டையில் வந்துவிட்டது. அதிவேகமாக வந்துகொண்டிருந்த வீதிவிடங்கன் இதை சற்றும் எதிர்பார்கவில்லை. தான் வந்துகொண்டிருந்த தேரை நிருத்தமுற்படுவதற்குள், அந்த பச்சிளங்கன்று தேரின் கால்களில் அகப்பட்டுகொண்டது.

அடி பட்ட வேகத்தில் அந்த கன்று தூக்கி எறியப்பட்டு அதன் அன்னையின் காலடியில் சென்று விழுந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் அந்த பசு தன் கண்முன்னே அதன் அருமைக்கன்று துடிதுடித்து இறப்பதை கண்டு கதறி அழுதது. தேரோட்டிவந்த இளங்குமரனும் நொடிப்பொழுதில் நடந்து முடிந்த சம்பவத்தால் செய்வதறியாது திகைத்தான். தான் ஆர்வ மிகுதியால் செய்த காரியம் எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்தான். தேரை ஓரமாக நிறுத்திவிட்டு கன்று எறியப்பட இடத்தை நோக்கி நடந்தான்.

ஒருவழியாக அந்த தாய்  பசுவும் அவன் தேரில் ஏற்றிய கன்றும் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து அதன் அருகில் சென்று பார்த்தான். கன்று தன் இன்னுயிரை இழந்து வெற்றுடம்பாய்  கிடந்தது. அதன் தாய் அந்த கன்றின் முகத்தில் அழுகையுடன் தனது நாவால்  வருடிக்கொண்டிருந்தது.

ராஜகுமாரன் கதறி அழுதான். கன்றை பிரிந்து வாடும் பசுவின் உள்ளக்குமுறலை அவனால் நன்றாக உணரமுடிந்தது. தெரியாமல் தான் செய்த தவறே ஆனாலும் ஒரு உயிரை பலிவாங்கும் அளவுக்கு கொடூர காரியத்தில் ஈடுபட்டதை எண்ணி வேதனையில் வாடி தவித்தான்.  பசு எழுந்தது. மௌனமாக அங்கிருந்து நடக்க தொடங்கியது. ராஜகுமாரன் அங்கேயே மண்டியிட்டு அமர்ந்தான். கன்றை இழந்த கனத்த இதையதுடன் பசு நகரை நோக்கி நடந்தது. மன்னரின் அரண்மனை முன்பாக வந்து நின்றது. நின்று சிறிது நேரம் அந்த மணிக்கூண்டை உற்று பார்த்துவிட்டு தன் வாயினால் அதன் கையிற்றை பிடித்து இழுத்தது.

நடு சாமத்தில் நீதி மணியோசை கேட்ட மன்னர் திகைத்து எழுந்தார். யாருக்கு என்ன பிரச்சனை நேர்ந்ததோ என்ற குழப்பத்தோடு வெளியில் வந்து பார்த்தார். ஒரு பசு கண்ணீருடன் நின்றுகொண்டிருந்தது. அதை கண்ட மன்னர் அந்த பசுவிற்கு எதோ துன்பம் நேர்ந்திருக்கிறது என்பதை உணர்ந்தார். உடனே அங்கிருந்த காவலாளிகளிடம் விவரத்தை கேட்டார். யாருக்கும் என்ன நடந்தது, ஏன் இந்த பசு இங்கு வந்து நீதி கேட்கிறது என்று தெரியவில்லை. அனைவர் முகத்திலும் கவலையும் குழப்பமும் குடிகொண்டிருந்தது.

சற்று நேரத்தில் அந்த பசு, தான் வந்த வழியே திரும்ப நடக்கதொடங்கியது. மன்னரும் அதை தொடர்ந்து நடக்கலானார். அவருடன் சில காவலாளிகளும் தொடர்ந்தனர். பசு நேராக அதன் கன்று இறந்துகிடந்த இடத்தை சென்று அடைந்தது. அங்கு வந்து பார்த்த மன்னர் பேரதிர்ச்சி அடைந்தார். ஓரமாய் நின்றிருக்கும் தேர், இறந்து கிடக்கும் கன்று, கண்ணீருடன் ராஜகுமாரன் ஆகிய அனைத்தையும் கண்ட மன்னர், நடந்ததை ஒருவாறு ஊகித்துக்கொண்டார்.

தந்தையை போலவே நேர்மையுள்ளம் படைத்த அந்த சோழ இளங்குமரன் நடந்த விபத்தை முழுவதுமாய் உரைத்தான். மன்னர் மனம் வேதனையில் இதுவரை அறியாத கலக்கத்தை அடைந்தது. வீதிவிடங்கன் காவலாளிகளால் கைது செய்யப்பட்டான்.

மறுநாள் அரசவை கூடியது. மக்கள் எல்லோரும் கூடியிருந்தனர். தெரியாமல் தவறு செய்துவிட்ட அந்த பிள்ளைக்காக மனமுருகினார்.

இதுவரை நீதியே தவறாத மன்னன் இதை எப்படி எதிர்கொள்ள போகிறார் என்று பெரும் குழப்பத்துடன் பேசிக்கொண்டனர். கன்றை இழந்த பசு அரசவைக்கு கொண்டுவரப்பட்டது. மன்னரின் அருந்தவப்புதல்வனும் அவைக்கு அழைத்து வரப்பட்டான்.

விசாரணை தொடங்கியது. வீதிவிடங்கன் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு என்ன தண்டனை கொடுத்தாலும் அதை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாக கூறினான். மன்னர் அவனை மைதானத்தின் மத்தியில்  போய் முன்னரே வெட்டி வைத்திருந்த குழியில் இறங்கசொன்னர். மகனும் மறுபேச்சின்றி அவ்வாறே செய்தான்.

சற்று நேரத்தில் அங்கு ஒரு யானை கொண்டு வரப்பட்டது. இதை கண்ட மக்கள் மனதில் சொல்லவொன்னா திகிலும் பீதியும் பற்றிக்கொண்டது. தங்கள் இளவரசனுக்கு யானையின் காலை இடறி மரணிக்கும் மரணதண்டனை விதிக்கபட்டிருக்கிறது என்று உணர்ந்த மக்கள் வேண்டாம் வேண்டாம் என்று அவலக்குரல் எழுப்பினர்.

ஆனால் அந்த நீதி நெறி தவறாத மன்னனும் அவன் தவப்புதல்வனும் நெஞ்சை கல்லாக்கிக்கொண்டு  கண்களை மூடி மௌனத்தில் ஆழ்ந்தனர். மகன் சாந்தமே உருவாய் மரணத்தை எதிர்கொண்டான். தந்தை ஆயிரம் சூறாவளிகள் தன் நெஞ்சத்தை சுற்றியாடிக்க சற்றும் அசையாத பாரையென நின்றிருந்தார்.

கரிய இமையம் போல் நடந்து வந்த யானை தன் காலால் அந்த வைர நெஞ்சம் படைத்த இளங்குமரன் தலையை மிதித்து நடந்தது. பசு நீதி கிடைக்கப்பெற்றது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கிய எல்லாளன் அது முதல் மனு நீதி சோழன் என்று வழங்கப்பட்டார்.

நீதிவழுவமையின் உச்சத்தை நாட்டு மக்களுக்கும் பின்னால் வரப்போகும் பல சரித்திர புகழ் பெற்ற மன்னர்களுக்கு ஒரு வழிகாட்டும் பாடமாகவும் அமைந்தது இந்த சோழ சக்கரவர்த்தியின் வாழ்கை. சிலப்பதிகாரமும் பெரியபுராணமும் இந்த வரலாற்றை அழியா புகழுடையதாய் விளக்கியுள்ளன.

தனது நாட்டு மக்களாலும், ஏன் எதிரி நாட்டு மன்னர்களாலும் இவர் தர்மராஜன் என்று போற்றப்பட்டார். அனைத்து பிரஜைகளையும் சமமாக பாவிதித்து விண்ணோர் போற்றும் ஆட்சி புரிந்த மனுநீதியின் ராஜ்யத்தை புத்தர்களும் போற்றினர்.

இவரது ராஜாங்கத்தை சீண்டிப்பார்க்கவும் யாருக்கும் துணிவில்லாமல் இருதது. 70 ஆண்டு காலம் நல்லாட்சி புரிந்த இந்த மன்னனுக்கு தனது முதிய பராயத்தில் தூதகாமணி என்ற சிங்கள இளவரசனால் இன்னல் வந்தது. தூதகாமணி , ருஹுமா என்ற இலங்கையின் தென்கிழக்கு பகுதியை சேர்ந்த சிற்றரசை ஆண்டு வந்த கவன்டிசா என்ற மன்னனின் மகன்.

இந்த இடத்தில் மனுநீதி சோழர் எப்படி தமிழர்களிடையே சரித்திரத்தில் நீங்கா இடம் பிடித்தாரோ அதே போல சிங்கள வம்சத்தில் வந்த தூதகாமணி வரலாற்றை கொஞ்சம் தெரிந்துகொள்வது பொருத்தமாக இருக்கும்.
தூதகாமணி --

சிங்கள அரசர்களின் புகழ் பாடும் மகாவம்ச புராணம் தூதகாமணியின் வரலாற்றை பாட 6 அத்தியாயங்கள் வழங்கியுள்ளது. மகாவம்ச புராணம் மொத்தம் 35 அத்தியாயங்கள் கொண்டது. இதிலிருந்தே தூதகாமணி எப்பேர்பட்ட புகழ் வாய்ந்தவன் என்பதை நாம் விளங்கிக்கொள்ள முடிகிறது. நம் இனத்தை அழித்த எதிரி ஆனாலும் அவனை பற்றி அறிந்துகொள்வதில் தவறில்லை.

எல்லாளன் அனுராதபுரத்தை ஆண்டுகொண்டிருக்கும் போது அதனை அடுத்த ருஹுமா என்ற சிற்றரசு இருந்தது. இரண்டுக்கும் நடுவே மகாகங்கை என்று அழைக்கப்பட்ட பெருநதி ஓடியது. ருஹுமா நகரை கவண்டிஸா என்ற மன்னன் ஆண்டுவந்தான். இவன் புத்த தருமத்தில் மிகுந்த ஈடுபாடுடையவனாகவும் புத்த மதத்தை மேலும் பரப்புவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்பவனாகவும் ஆட்சி புரிந்து வந்தான். கல்யாணி என்ற சிற்றரசை ஆண்டு வந்த டிஸ்சா என்ற மன்னனின் மகள் விஹாரமஹாதேவி பின்னாளில் கவண்டிஸா மன்னனை மணந்து காமணி என்ற மகனை ஈன்றெடுத்தல். இவனே தனது ஒழுக்கமற்ற செயல்களால் தூதுகாமணி (தூது எனபது துஷ்ட என்று பொருள் படும்) என்று பெயர் பெற்றான்.

ஒருமுறை கல்யாணி நகரின் மன்னன் டிஸ்சா ஒரு புத்த பிட்சுவினை கொடூரமாக கொன்றான். இதனால் கல்யாணி நகரம் பலமுறை கடலின் சீற்றத்திற்கு ஆளானதாகவும் இது அந்த மன்னனுக்கு புத்தபிட்சு வழங்கிய சாபம் என்றும் நம்பப்பட்டது. இப்படியே தொடர்ந்தால் ஒருநாள் கடல் கல்யாணி நகரை முழுமையாக கொண்டுபோய்விடும் என்றும் மக்கள் அனைவரும் மூழ்கி சாகநேரிடும் என்றும் அவரது அமைச்சர்கள் ஆலோசனை கூறினர். மேலும் கடல் ராஜனை குளிர்வித்து நகரையும் மக்களையும் காக்க ராஜவம்சத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கடலுக்கு பலியிடவேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதனால், குழப்பமடைந்த மன்னன், இறுதியில் தனது மகளையே பலிகொடுக்க முடிவுசெய்தான்.
ஒரு தங்க படகில் தனது மகளை வைத்து அதில் நிறைய பொன்னும் பொருளும் ஆபரணங்களும் வைத்து, 'மன்னன் மகள்' என்று எழுதி கடலுக்குள் அனுப்பினான்.
கடலில் மூழ்கி பலியாவல் என்று நினைத்த அரசிளங்குமரி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி ருஹுமா கரையை வது அடைந்தாள். பின்னர் அந்நாட்டு மன்னன் கவண்டிஸாவை மணந்து ராணியானால்.
விஹாரமஹாதேவி கர்பமுற்றிருந்த காலத்தில் அவளுக்கு வினோதமான பல ஆசைகள் ஏற்பட்டன. இவை பெரும்பாலும் தீய எண்ணங்களாகவே இருந்தன. கர்பகாலத்தில் தேனீக்களாலும் தேன்கூட்டினாலும் செய்த தலையணையில் உறங்க ஆவல் கொண்டால். எல்லாளனின் தலையை வெட்டி அந்த வாளை கழுவிய நீரை அருந்த ஆசைபட்டால். அதுவும் எல்லாளன் தலைமீது ஏறிநின்று அதை அருந்த ஆவல்கொண்டால். இதையெல்லாம் கேட்ட அவையிலிருந்த குரிகூருவோர் அவளுக்கு பிறக்கப்போகும் மகன் நிச்சயம் தங்கள் நாட்டில் ஊடுருவி ஆட்சி புரியும் தமிழ் மண்ணை வென்று இலங்கையில் ஸ்திரமான பெரிய ராஜாங்கத்தை உருவாக்குவான் என கட்டியம் கூறினர். ராணி சில மாதங்களின் தாமணி என்ற ஆண் பிள்ளையை ஈன்றால். சில வருடங்கள் கழித்து டிஸ்சா என்ற மகனையும் பெற்றால்.
தாமணி பிறந்தபோது ஆறு துதிக்கைகள் கொண்ட யானை ஒன்று தன் குட்டியுடன் வந்து அதை அரசவையில் விட்டுவிட்டு சென்றது. அந்த குட்டி யானை குண்டலா என்று பெயரிடப்பட்டு தாமணியுடன் வளர்க்கப்பட்டது. பின்னாளில் குண்டலா தாமனியின் பட்டத்து யானையாக அவனுக்கு பெரும் துணையாக இருந்தது.
பிறந்தது முதலே அவனது தாய் அவனுக்கு எல்லாளனை வெல்லவேண்டும், அவர் ஒடுக்கிய ராஜரத பேரரசை மீட்டெடுக்கவேண்டும் என்ற என்னத்தை தீயை வளர்த்துவந்தாள். தாமணி இளம் வயதில் கடும் முரடனாகவும், வீரனாகவும், அறிவுக்கூர்மை வாய்ந்தவனாகவும் விளங்கினான். அவன் எல்லாளனின் படைபலத்தையும் பெரும் சைன்யத்தையும் கண்டு அஞ்சவில்லை.
இவன் இளவரசனானதும் எப்படியாவது எல்லாளனை வென்று அனுராதபுரத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைத்தான். ஆனால் அவனது தந்தை இதற்கு இணங்க மறுத்தார். பெரும் பலத்தோடு ஆட்சிபுரியும் எல்லாளனை எதிர்ப்பது தமது ஆட்சிக்கே பங்கமாக முடியும் என்று அஞ்சினார். தனது ராஜ்யத்தை விரிவுபடுத்தும் எண்ணமும் ஆசையும் அவருக்கு இருந்தாலும் தகுந்த படைபலம் இல்லாமல் எல்லாளனை மோதுவது அறிவின்மை என்பதை அவர் நன்றாக அறிந்திருந்தார்.
ஆனால் அவரது மகனோ இளங்கன்று பயமறியாது என்ற பழமொழிக்கு ஏற்ப தந்து தந்தையை 'நீ ஒரு ஆணாக இருந்தால் இப்படி சொல்லமாட்டாய்' என்று பரிகசித்தான். அத்தோடு நில்லாமல் பெண்கள் அணியும் ஆபரணங்களையும் அவருக்கு பரிசாக அனுப்பினான்.
இதைக்கண்டு வெகுண்டெழுந்த கவன்டிசா தனது மகனுக்கு ஒரு நல்ல பாடம் புகட்ட எண்ணினார். படைதிரட்டி போருக்கு தயாராக இருந்த தனது மகன் தாமணியையும் அவனது நண்பர்களையும் சிறைபிடித்தார். அவன் செய்ய துணிந்தது எத்துனை பெரிய தவறு என்பதையும் விளக்கிக்கூறினார்.
எல்லாளனை எதிர்க்கவேண்டும் என்றால் முதலில் இருக்கும் ராஜ்ஜியத்தை பலப்படுத்த வேண்டும். ராஜாங்க கருவூலம் செழிப்புடன் இருக்க வேண்டும். அதற்கு நாட்டில் விளைச்சலையும் வலிமையையும் பெருக்கவேண்டும். இதையெல்லாம் செய்தபிறகே எல்லாளனை எதிர்ப்பதை பற்றி நினைத்து பார்க்கவும் முடியும் என்று கூறி அதை செயல்படுத்தவும் செய்தார். அதுவரை தனது மகனை அமைதி காக்க சொன்னார். இந்த ஏற்பாட்டின் ஒரு படியாக நாட்டில் நிறைய பலம் வாய்ந்த உடற்கட்டு கொண்டவர்களையும் பைல்வாங்களையும் கடும் பயிற்சி செய்ய வைத்து போருக்கு தயார் செய்தார். இதற்கிடையே தாமணிக்கும் அவனது தம்பி டிஸ்சாவுக்கும் அடிக்கடி ராஜ்ய பாரத்தை ஏற்பதில் சண்டை மூண்டது. இருவரும் தந்தைக்குப்பின் அரசனாக எண்ணினர்.
தாமணியின் செயல்களால் அவன் மீது கோபம் கொண்டிருந்த அவன் தந்தை டிஸ்சாவுக்கு பல சலுகைகள் வழங்கினார். இதனால் டிஸ்சா தாமணியின் யானை உட்பட அரசாங்கத்தின் பல முக்கியஸ்தர்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தான். இதனால் மன்னரின் மரணத்திற்கு பின்பு தாமணி தன் தம்பியுடன் யுத்தம் செய்யவேண்டியதாயிற்று.
போரில் தாமணி தோல்வியடைந்து தன்னுடைய ஆயிரக்கணக்கான ஆதரவலர்களையும் இழந்தான். இதனால் தாமணி புறமுதுகிட்டு தப்பியோட நேர்ந்தது. தப்பி ஓடிய தாமணி மகாகாமா என்ற நாட்டில் தஞ்சம் புகுந்தான். சிலநாட்களில் அங்கேயே ஒரு படையை திரட்டிக்கொண்டு தனது தம்பியுடன் மீண்டும் போரிட்டான். டிஸ்சா தன் அண்ணனிடமிருந்து கைப்பற்றிய பட்டத்து யானை குண்டலாவின் மீதும் தாமணி ஒரு பெண் குதிரையின் மீதும் ஏறி போர் புரிந்தனர்.
தனது யானை மேல் வரும் டிஸ்சாவை பார்த்ததும் தாமணிக்கு ஒரு உத்தி தோன்றியது. தனது அன்பிற்குரிய யானை தன்னை எதிர்க்க ஒருபோதும் துணியாது என்று அவன் நம்பினான். எனவே எதிரே வருவது தன் எஜமானன் என்று தெரிந்தால் யானை நிச்சயம் தனக்கு உதவும் என்று எண்ணினான். எனவே குதிரைமீது இருந்தவாறு யானையின் கண்ணில் படும்படி அதனருகே தாவிக்குதிதான். யானை அவனை கண்டுகொண்டது. அவன் எதிர்பார்த்தபடியே யானை தன் விசுவாசத்தை காட்டதொடங்கியது.
டிஸ்சா எதிர்பார்க்காத நேரத்தில் அவனை தன் முதுகில் இருந்து தூக்கி அடித்தது. யானைமீதிருந்து தூக்கியெறியப்பட்ட டிஸ்சா kattu மரங்களினூடே சென்று விழுந்தான். தாமணி வெற்றி பெற்றான். டிஸ்சா போர்களத்திலிருந்து தப்பி ஓடி உயிர் பிழைத்துக்கொண்டான். சிலவருடங்கள் கழித்து டிஸ்சா தன் அண்ணனிடம் திரும்பி வந்து மண்ணிப்பு கோரவே தாமணி அவனை மண்ணித்து அரசவையில் மந்திரியாக்கினான்.

Sunday, November 4, 2012

முயலை வென்ற ஆமை

அது ஒரு அடர்ந்த காடு. சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற கொடிய விலங்குகளும் மான், முயல், காட்டுக்குதிரை, வரிக்குதிரை போன்ற அமைதியான விலங்குளும் தங்களுக்கென எல்லைகளை வகுத்துக்கொண்டு வாழும் அளவுக்கு மிகப்பெரிய காடு.

அந்த காட்டில் சுமார் 150 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஆமை ஒன்று தனது பேரக்குழந்தைகளை காண காட்டின் மறுபகுதிக்கு சென்றிருண்டது. குழந்தைகளுடன் அன்றைய நாளை அமைதியை செலவிட்ட ஆமை மாலை வந்ததும் தனது இருப்பிடத்தை நோக்கி புறப்பட்டது.

ஆமை மிகவும் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தது. இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் வெகுதூரம் இருந்தது.

வானம் மிகவும் கருத்து மேகக்கூட்டங்கள் அந்த காட்டின் மீது படர்ந்தன. அதை கண்ட காட்டு விலங்குகளும் பறவைகளும் தங்கள் வேலைகளை சீக்கிரம் முடித்துக்கொண்டு தங்கள் வீடுகளை நோக்கி வேகமாக திரும்பின. பல விழங்குகள் தங்கள் பிள்ளைகளையும், உணவுப்பொருட்களையும் பதிரப்படுதுவதில் முனைப்புடன் ஈடுபட்டன.


அப்போது அந்த ஆமை நடந்து சென்ற வழியாக ஒரு இளம் முயல் வேகமாக ஓடிவந்து கொண்டிருந்தது.

அந்த முயல் ஓடிவரும் வழியில் ஆமை மிகவும் மெதுவாக நடந்து வருவதை கண்டது. அதைக்கண்டதும் அந்த இளம் முயல் ஆமையை பார்த்து "ஏ சோம்பேறி ஆமையே வேகமாக ஓடு. இல்லையென்றால் மழையில் நனைந்து விடுவாய்" என்று சொன்னது.

அதை கேட்ட ஆமை "தம்பி ! உன் எச்சரிக்கைக்கு நன்றி, அனால் என்னால் உன்னைமாதிரி ஓட முடியாது, நான் மெதுவாகத்தான் வருவேன்" என்றது.

முயல் "என்ன ? உன்னால் ஓட முடியாதா? அப்பறம் எதற்கு நீயெல்லாம் இந்த உலகத்தில் வாழ்கிறாய்?" என்று ஏளனமாய் சிரித்தது.

இதை கேட்டு சற்றும் கொபமடையாத ஆமை "தம்பி ! உனக்கு என்ன வயது ஆகிறது? " என்று கேட்டது. அதற்கு அந்த முயல் "நான் மிகவும் பெரியவன். நான் பிறந்து 15 மாதங்கள் ஆகின்றன" என்று பதில் கூறியது.

"தம்பி ! நான் இந்த பூமிக்கு வந்து 150 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. நான் இதே மெதுவான நடையுடந்தன் இந்த 150 ஆண்டுகளையும் கடத்து வந்துள்ளேன். அதனால் என்னை பற்றி ஏளனமாய் பேசாதே. எனக்கு வேகம் இல்லாமல் இருக்கலாம். அனால் நிறைய விவேகம் உள்ளது. " என்று எடுத்து கூறியது.


"விவேகத்தை வைத்து என்ன செய்வாய்? இப்போது மழையில் மாட்டிக்கொள்ளாமல் உன்னால் வீடு பொய் சேர முடியுமா? "என்றது.

"முடியும் தம்பி ! என்னால் முடியும்" என்று சற்றே புன்சிரிப்புடன் சொன்னது ஆமை.

"எங்கே பார்க்கலாம். நம் இருவருக்கும் ஒரு போட்டி. யார் இந்த காட்டின் மறுமுனையை முதலில் அடைகிறார்கள் என்று. போட்டிக்கு தயாரா?" என்றது முயல்.

"சரி தம்பி ! உன் விருப்பம் ! " என்ற ஆமை அதே வேகத்தில் நடந்து கொண்டிருந்தது.

முயல் முன்னைவிடவும் மிகவும் வேகமாக ஓடியது. தன்னால் இயன்ற வேகத்தை விடவும் மிகவும் வேகமாக ஓடியதால் ஏற்பட்ட பெருமூச்சையும் பொருட்படுத்தாமல் அது ஓடிக்கொண்டிருண்டது.


Thursday, August 30, 2012

கா கா கா....


ஒரு ஊரிலே ஒரு காக்கை இருந்தது. அது ஒருநாள் நாள் தன்னுடைய நீண்டநாள் நண்பனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல அவனது ஊருக்கு புறப்பட்டது. 


அந்த நண்பனின் ஊர் காக்கையின் வீட்டிலிருந்து வெகுதூரத்தில் இருந்தது. 
எவ்வளவு தூரம் இருந்தால் என்ன? நண்பன் முக்கியமல்லவா..
காக்கை உற்சாகமாக புறப்பட்டு பறந்து சென்றது. 

நெடுநேரம் பிரயாணம் செய்த காக்கை களைப்புற்று ஒரு வீட்டின் மொட்டை மாடியில் வந்து அமர்ந்தது. 
சிறிது நேரம் கண்களை மூடி ஓய்வெடுத்த காக்கை 'மிகவும் தாகமாக இருக்கிறதே, சிறிது தண்ணீர் கிடைத்தால் நன்றாக இருக்குமே' என்று எண்ணியது.

அந்த பகுதியில் நிறைய வீடுகள் இருந்தன. அதனால் அந்த காக்கை எப்படியும் தண்ணீர் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் வானத்தில் பறந்து அந்த வீடுகளை சுற்றி வட்டமிட்டது.

ஆனால் எங்கும் தண்ணீர் கண்ணில் தென்படவில்லை. 
ஏமாற்றமடைந்த காக்கை, 'இது என்ன கொடுமை. எங்குமே தண்ணீர் இல்லையே. இப்போது நான் என்ன செய்வது? கடவுளே ! எனக்கு தாகமாக இருக்கிறதே, ஏன் நண்பனை காண வெகுதூரம் போகவேண்டுமே' என்று சோகமாக தனக்குள் பேசிக்கொண்டது. அப்போது அந்த காக்கையின் கண்ணில் ஒரு மண்குடம் தென்பட்டது.

அதை பார்த்த காக்கை ஆவலுடன் அதனருகில் சென்று அதனுள்ளே எட்டிப்பார்த்தது. 

என்ன ஆச்சரியம்! அந்த குடத்தின் உள்ளே கொஞ்சமாக தண்ணீர் இருந்தது. மிகுந்த உற்சாகமடைந்த காக்கை அதன் விளிம்பில் உட்கார்ந்து உள்ளே தலையை விட்டு தண்ணீரை குடிக்க முயன்றது. அனால் முடியவில்லை. தண்ணீர் மிகவும் அடியில் இருந்தது. காக்கையால் அவ்வளவு உள்ளே குனியமுடியவில்லை. 


தாகம் தீர்க்க உதவும் தண்ணீர் அருகே இருந்தும் அதை அள்ளிப்பருகமுடியாத தவிப்பில் இருந்த காக்கைக்கு சட்டென்று ஒரு யோசனை உதயமானது.

அறிவுக்கூர்மையுடைய அந்த காக்கை சுற்றும் முற்றும் பார்த்தது. கல்லும் மண்ணும் சில பூந்தொட்டிகளும் இருந்தன.

உடனே அந்த காக்கை அந்த கற்களை ஒவ்வொன்றாக எடுத்து அந்த தண்ணீர் இருந்த பானைக்குள் போட்டது.

வெகு தூரம் பிரயாணம் செய்து வந்த களைப்பையும் பொருட்படுத்தாமல் அந்த காக்கை மிகுந்த முனைப்புடன் அங்கு சிதறிக்கிடந்த கூழங்கர்களை எடுத்து பானைக்குள்  போட்டுக்கொண்டே எட்டி எட்டி பார்த்தது.

தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வருவதை கண்ட அந்த காக்கை பெரும் மகிழ்ச்சி அடைந்து  மேலும் உற்சாகத்துடன் கைக்கிளை நிரப்பியது.
சிறிது நேர முயற்சிக்கு பின், தண்ணீர் முழுவதுமாக மேலே வந்து நின்றது. அதை பார்த்த காக்கை தன்னுடைய முயற்சிக்கு பலன் கிடைத்ததை எண்ணி இறைவனுக்கு மனதார நன்றி கூறியது. பின்னர் நிதானமாக அந்த தண்ணீரை பருகி தாகம் தனித்துகொண்டது.

நண்பனை காண உயரே பறக்க தொடங்கியது. !!! கா கா கா....